Wednesday, October 3, 2007

அது ஒரு பொற்காலம்

1965 ஆம் வருடம்.ஹிந்தி எதிர்ப்பு தீவிரமாக‌ இருந்தது.பள்ளியில் எங்கள் தமிழாசிரியர் தினமும் மூளைச்சலவை செய்து கொன்டிருந்த நாட்கள்.(சலவை செய்யாவிட்டாலும் வெள்ளையாகவே இருந்தது மூளை)படிப்பு தவிர எதுவுமே தெரியாத நாட்கள்.தொலைக்காட்சிப் பெட்டி கிடையாது.
தொலை பேசியும் கிடையது.ிகவும் எளிமையான காலம். மின் விசிறிகூட பகல் வேளையில் உபயோகித்ததில்லை. இன்றைய குழந்தைகள் படித்தால் சிரிப்பர்கள்.
காலையில் ஆறு மணிக்கு மேல் ஒரு நாள் கூட எழுந்தது கிடையாது.காலையில் எழுந்து அண்ண‌ன் ,தம்பி,தங்கை,படிப்பு தவிர வேறு எதிலும் மனது சிதறாத நாட்கள்.தினசரிகளைப் பார்த்து தெரிந்து கொன்ட வெளியுலகத் தகவல்கள். எதிர் காலத்தில் என்னவாகப் போகிறாய் என்று யாராவது கேட்டால் அரசியல்வாதியாகப் போகிறேன் என்று நேரு,காந்தி, காமராசர், அண்ணாவை நினைத்துக்கூறும் வெள்ளையான பதில்.பள்ளியின் இலக்கியக் கூட்டங்களில் போடு போடென்று போட்டு எல்லொர் மனதையும் கவர்ந்த நாட்கள்.
அப்பா கொடுத்த‌ நானூறு ரூபாயில் ஒரு மாத காலம் ஓட்டி (ஏழு பேர் சாப்பாடு சாப்பிட்டு ,வீட்டு செலவுகள் செய்து ,இரன்டு பசு மடுகளை பராமரித்துத் தெரிந்துகொன்ட பொருளாதாரம். தெரு முனையில் முனிசிபாலிடிக்கார‌ர்க‌ள் காட்டிய‌ செய்திப்ப‌ட‌ தொகுப்பைப் பார்த்துத் தெரிந்து கொன்ட‌ சுய‌ சுகாதார‌ம்.
வீட்டுக்கு வந்த உற‌வின‌ரை அம்மா‌ அப்பாவுட‌ன் உப‌ச‌ரித்து, பெரியம்மா‌ தலைவாரிப் பூச்சூட்டிவிட சித்தி இனிப்பு செய்து பரிவொடு கொடுக்க ,நாங்கள் அவர்களுக்கு ஏகப்பட்ட அன்பைப் பரிசாக அளிக்க வீடு கொண்டாட்டமாயிருக்கும்.அம்மா சமைக்க வேன்டுமெ என்று முகம் சுளிக்க மாட்டள். அப்பா செலவாகிறதேயென்று முணுமுணுக்க மாட்டார்.உறவுகள் இனிப்பாயிறுந்த காலம். ஒருவருக்கொருவர் நல்லது கெட்டதுகளைப் பெரியவர்கள் பறிமாரிக்கொண்டனர்.ஆலோசனைகள் இலவசமாகக் கிடைத்த காலம். மனித வளமேம்பாடு க‌ற்றுக்கொடுக்க தனியாக‌ தொழில் முனைவோர் தேவையில்லாமல் இருந்தது.
உணவே மருந்தாய் மருந்தே உணவாய் இருந்த காலம்.எவ்வளவுதான் இருந்தாலும் காலையில் சர்க்கரை குறைவான பால்தான்.பிறகு பழைய சோற்றில் தயிர் கலந்து ஊறுகாயுடன் சாப்பிடுவோம். ஊறுகாய்கள் பருவத்துக்கேற்ப மாறும். மாங்காய், இஞ்சி, குடமிளகாய், நெல்லிக்காய் என்று. கீரையும் பச்சடியும் இல்லாமல் சாப்பாடு கிடையாது . பச்சடிகள் ஏராளமான வகைகள்,விளாம்பழம், மாங்காய்,வெள்ளெரிக்காய் என்று. இரவு ஏழு மணிக்கு சாப்பாடு முடிந்து விடும் .ஒன்பது மணிக்கு அனேகமாகத் தூங்கியிருப்போம்.
கூடப்பிறந்தவர்களிடம் நமக்குக் கிடைத்ததைப் பகிர்ந்து கொள்வதை விட ஒரு பேரின்பம் உலகில் இருக்க முடியாது.வீட்டில் ஒருவர் இல்லையென்றாலும் ஒரு மாம்பழமாக இருந்தாலும் அவருக்குள்ள பங்கு எடுத்து வைகக்கப்படும்.கிடைகாத சமாசாரம் ஒன்றுமில்லை யென்று எடுத்து வைக்காமல் சாப்பிடும் பழக்கம் இருந்ததில்லை.
மருத்துவரிடம் போகாத பல வருடங்கள். வீட்டு வைத்தியத்திலேயே பிள்ளை பெற்ற காலங்கள்.பிள்ளை பெற்ற காலத்தில் ஆங்கில மருந்து ஒன்று கூட உண்டதில்லை.கால்ஷியம் மாத்திரைகளை கண்ணால் கூடப்பார்த்ததில்லை.மல்டி வைடமின்களை கண்ணால் கூடப்பார்த்ததில்லை. சொன்னால் நம்பக்கூட ஆளில்லை இப்போது.உணவுக்கட்டுப்படு மிக அவசியம். நெய் இல்லாமல் உணவு சாப்பிடும் பழக்கம் இல்லை ஆனால் இரன்டு ஸ்பூனுக்கு மேல் நெய் ஊற்றிக்கொண்டதில்லை. ஆனால் பிள்ளை பேற்றின் போது கை நிறைய நெய் ஊற்றி குடிக்கக்கொடுப்பார்கள்.பிள்ளைக்குத் தவறாமல் பால் கொடுத்ததாலொ என்னமோ வயிறும் இடுப்பும் வீங்கிப்பொகவில்லை.
சுக்கும் திப்பிலியுமே மருந்து.பிள்ளை பெற்ற வீட்டில் யாரையும் பிள்ளை யிருக்கும் அறைக்குள் அனுமதிப்பதில்லை.தொற்று நொய்கள் வர வாய்ப்பில்லை.
இப்படி ஒழுக்கம் ,அரசியல்,சுகாதாரம், பொருளாதாரம்,உணவுப்பழக்கம்,உடல் நலம், மன வளம் எல்லாம் கற்றுத்தரும் ஒரு வாழ்க்கை நம் அடுத்த தலை முறையினருக்கு கிடைக்குமா?
நான் சிறுபெணணாக பள்ளியில் படிக்கும்போது நடந்த சம்பவம் ஒன்று நினைத்துபார்க்கையில் சிரிப்புத்தான் வரும். நான் ஒன்பதாம் வகுப்புப்படித்துக்கொன்டிருந்தேன். அப்போது எனக்கு பிறந்த நாள் வந்தது.பள்ளிப்பருவத்தில் பிறந்த நாள் என்பது மிகப்பெருமையன விஷயம்.ரொம்ப உற்சாகமாக நான் பள்ளியில் சக மாணவிகளுடன் உலவிவிட்டு படு மும்முரமாக வகுப்பு நடக்கும் சமயம் ஒரு திடீர் திருப்பம் என் பிறந்த நாள் கொண்டாட்டத்தில்.பள்ளியில் வெலை செய்யும் செவகர் என்னை தலைமை ஆசிரியர் கூப்பிடுவதாக வந்து தெரிவித்தார். அப்போதெல்லம் தலமை ஆசிரியர் கூப்பிடுவது என்பது மிக பயமுறுத்தும் விஷயம். பாராட்டுவதாக இருந்தால் வகுப்பின் நடுவில் கூப்பிட்டு பாராட்ட மாட்டர்கள் என்பது எல்லொரும் அறிந்ததே.எனக்கு எப்படி எதிர்கொள்வது இந்த விஷயத்தை என்று இருந்தது.
சமாளித்துக்கொன்டு தலைமையசிரியர் அறையை நோக்கிப்பொனேன். அங்கே தலைமை ஆசிரியர் மற்றும் ஒருகுமாஸ்தா தபால்காரர் மூன்று பெரும் என் வருகைக்காக காத்திருந்தனர்.எனக்கு மனதில் பயம். ஆனலும் நாம் எந்த தவறும் செய்யவில்லை என்ற நம்பிக்கையும் இருந்தாலும் இந்த மதிரி ஒரு சூழ்னிலை புதிது ஆகையால் பதற்றமக இருந்ததது.
தலைமை ஆசிரியர் என்னைக்கன்டதும் உனக்கு எத்தனை அண்ணன்கள் என்று இயல்பாகக்கேட்டார்கள். எனக்கு உண்மையிலே ஒரு அண்ணன் தான். எஙு உண்மையைக்கூறினேன் ஒரு அண்ணன் என்று. பின் அண்ணான் என்ன செய்கிறார் எங்கு படிக்கிறார் போன்ற விவரங்களைக்கேட்டார். நானும் பயம் எதுவில்லாமல் உண்மையைக்கூறினேன். கையில் ஒரு பார்சலை எடுத்துக்காட்டி இதை அனுப்பியது யார் என்றும் உனக்கு இன்று பிறந்த நாளா என்றும் கேள்விக்கணைகளைத்தொடுத்தார். பார்சலை வாங்கிப்பார்த்த நான் அதன் மேல் இருந்த முகவரியைப்பர்த்தவுடன் தெம்பாகிவிட்டென்.அது எனது பெரியப்பா பிள்ளை (அண்ணன்முறைதான்) அனுப்பிய பார்செல்தான்.பிறந்த நாளுக்காக நினைவு வைத்துக்கொன்டு என் அண்ணன் எனக்கு அனுப்பிய பரிசை சரியாக பிறந்த நாள் அன்று நான் என் கையால் வாங்கிக்கொள்ள வெண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் என்பள்ளி விலாசத்துக்கே அவர் அனுப்பிய பரிசு இன்னொரு நல்ல எண்ணம் கொண்ட என் தலைமை ஆ சிரியரின் கைகளில் மாட்டிக்கொன்டு என்னைப்பார்த்து சிரித்தது.பள்ளிக்கு பரிசு வருகிறதா உன் அப்பவிடம் பேசிக்கொள்கிறேன் என்று மிரட்டி விட்டுச்சென்றார் போஸ்டு மேன்.தலைமை ஆசிரியருக்கு என்னைப்பற்றி மிக நல்ல அபிப்பிராயம்.இருந்தாலும் இதை வழக்கமாக ஆக்கிக்கொள்ளக்கூடாது என்ற எண்ணம்.போஸ்டுமேனுக்கு நல்ல குடும்பப்பெண் எந்த தவறுகளிலும் மாட்டிக்கொள்ளக்கூடது என்ற நல்ல எண்ணம்தான். நிறைய பெருடைய நல்ல எண்ணங்கள் என் பிறந்த நாளில் வெளிப்பட்டது என்னை பயப்படுத்தியது என்னவோ உண்மைதான்