நன்றிகள் பல . ஒரு சந்தேகம், எழுதினது பல இருக்க ஓட்ஸ் உங்களைக் கவர்ந்ததற்கு என்ன காரணம்?
கமலா
Sunday, May 25, 2008
Wednesday, April 30, 2008
உன்னை நேசிக்கும் ஒரு கூட்டம்................
இன்னைக்குக்காலையில் எழுந்து எதையாவது செய்யவேண்டும் என்று மட்டும் நினைக்கிறோம். திட்டமிடல் என்ற பெயரில்.திட்டமிடும் போது ஒரு மகனாக அல்லது மகளாக,தாயாக அல்லது தந்தையாக,கணவனாக அல்லது மனைவியாக,சகோதரனாக அல்லது சகோதரியாக மட்டுமே என்ன என்ன செய்யலாம் என திட்டமிடுகிறோம்.வேலை செய்யும் இடத்தில் செய்யவேண்டிய பணிகள் நிமித்தம் திட்டமிடவும் செய்கிறொம். என்றைக்காவது ஒரு சிறந்த மனிதனாக நாம் ஒரு நாளைத் திட்டமிட்டால் என்னவெல்லாம் செய்ய முடியும். யார் யாருக்கு என்ன என்ன செய்ய முடியும். எந்தெந்த வகையில் நாம் சிறந்தவன்? அதை நாம் எப்படி உபயொகித்து சில பல சிறந்தது என்று எல்லொராலும் கருதப்படுகிற செயலைச் செய்யமுடியும. முன்பு சொன்ன உறவு முறைகளை சந்தோஷப்படுத்த திட்டமிட்டு செயல்கள் செய்து வெற்றி பெற்றாலே போதுமே என்றுதான் பெரும்பாலும் எல்லொருக்கும் தோன்றும். அதையும் தாண்டி சாதிக்கப்பிறந்தவர்கள் சில பல செயல்களைச் செய்கிறார்கள்.அதனால்தான் அவர்களைச் சாதிக்கப் பிறந்தவர்களாக நினைக்கிறோம். அதற்கு மூலதனம் தன்னம்பிக்கை மற்றும் நேர்மையான உழைப்பு. தன்னம்பிக்கை எப்போது வரும்? தான் செய்யும் செயல் தீமை விளைவிக்காதது, நல்ல செயல்தான் என்பதை நாம் முதலில் நம்பவேண்டும்.அந்த செயலைச் செய்யும்போது ஏற்படும் அல்லல்கள் மற்றும் அவதுறுகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். நாம் அந்த செயலை அனுபவித்து(விரும்பி)ச்செய்ய வேண்டும்.அதைத்தான் involvement என்கிறார்கள்.
சில சமயங்களில் நாம் பார்ப்போம் சில தொழில்முனைவோர் (proffessionals)ஒரு வேலையில் அதிகமாக நாட்டம் காட்டுவார்கள் .அந்த வேலை அவர்களுக்கு மற்ற வேலைகளைவிட அதிக பணம் வர வாய்ப்பே இருக்காது. நேரம் அதிகமாகச் வழிக்கவேண்டியிருக்கும். வேலை பளுவும் அதிகமிருக்கும். ஆனாலும் அதைச் செய்ய நினைப்பார்கள் .செய்தும் வெற்றிகரமாக முடிப்பார்கள்.காரணம் அந்த ஈடுபாடும், நியாயமானது என்ற எண்ணமும் ,அந்த எண்ணம் தந்த நம்பிக்கையுமே ஆகும்.அந்த மாதிரி மனிதர்கள்தான் அடுத்தவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறார்கள்.மற்றவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவது என்பது சும்மா வருவதில்லை.மிகப் பெரிய பண்புகளில் தலையாய ஒன்று அது.உன்னை நம்புகிற கூட்டத்தையும் உன்னை நேசிக்கிற கூட்டத்தையும் சம்பாதிப்பது மிகவும் உயர்ந்தவை.அதைப்போல நமக்கும் பல சமயங்களில் நாம் ஏன் இதை எடுத்துச் செய்யக்கூடாது என்று தோன்றும்படி சில செயல்கள் நம் முன் நிற்கும். அந்ததருணங்களில் சிறிதுகூட அடுத்த சிந்தனைக்கு இடம் தராமல் நம்பிக்கை உள்ள ஒரு நல்ல செயலை ஈடுபாட்டுடன் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். நம் பிள்ளைகளுக்கு வளர்த்து விட வேண்டும்.அடுத்தவர் செய்யட்டுமே என்று ஒரு கணம் தவற விட்டால் ஒரு வாய்ப்பை நாம் வாழ்வில் தவற விடுகிறோம் எனப்பொருள்.

Monday, March 10, 2008
புதுமைப்பெண்கொடி
நாலு மாதம் முன்பு மதுரை போயிருந்தேன். தம்பி வீட்டில் இரண்டு நாள் தங்கி விட்டு வந்தேன். அவன் வீடு மதுரையில் ஒரு தனி வீடு, வீட்டைச்சுற்றி தோட்டம். தம்பியும் தம்பி மனைவியும் அழகிய தோட்டத்தை உருவாக்கியிருந்தார்கள்.எல்லாவிதமான மலர்களும் கொத்து கொத்தாகப் பூத்திருந்தன. பார்க்கவே ஆசையாக இருந்தது.அதில் சீக்க்கிரமே முளைக்கக்கூடிய சங்குச்செடியின் விதைகளைப் பறித்துப்பையில் போட்டுக்கொண்டு சென்னை வந்தேன்.சென்னைக்கு வந்ததும் சங்குச்செடி விதைகளை ஒரு தொட்டியில் மண் போட்டு நீர் ஊற்றி ஊன்றி வைத்தேன். ஒரு மாதகாலம் தண்ணிர் ஊற்றியபின் மெதுவாகச்செடி முளைத்து வர ஆரம்பித்தது.மெதுவாக இரண்டு இலகள் நான்கு இலைகள் என்று வளர ஆரம்பித்தது. ஏழெட்டு இலைகளும் விட்டு கொஞ்சம் கொடியும் வளர்ந்தபின் கொடி நுனி அறுந்து விடப்போகிறதே என்று ஒரு கொம்பைப்பக்கத்தி வைத்தேன். கொடியும் மேலே வளர்ந்ததே தவிர கொம்பைச்சுற்றிக் கொள்ளவே இல்லை. எனக்கோ ஒரே ஆச்சரியம்.நான் பார்த்தவரை கொடி நீளமாக வளரத்தொடங்கியவுடனேயே பக்கத்திலிருக்கும் எந்த ஒரு பற்றுதலையும் கொடிகள் சுற்றிக்கொள்வது இயல்பாக நடக்கும் ஒன்றுதானே?இந்தக்கொடி என்னவோ இரண்டு மூன்று நான்கு அடிகள் என்று வளர்கிறது ஆனால் கொம்பை சுற்றிக்கொள்ளவேஇல்லை. பக்கத்திலிருக்கும் கிரில் (grilல்)மீதும் படர வில்லை.இப்போது இன்னும் சில கிளைகள் அதே செடியிலிருந்து வளர்கின்றன. அவைகள் ஒன்றை ஒன்று சுற்றிக்கொள்கின்றன.கொம்பை நாடாத கொடியாக இந்த சங்குச் செடியைப் பார்த்தவுடன் அந்தச்செடிக்கு புதுமைப்பெண் என்று பெயரிடத் தோன்றியது எனக்கு. சரிதானே?
ஒரு தாயின் மரணம்
மரணம் நம் சொந்த பந்தங்களை நம்மிடமிருந்து பிரிக்கிறது என்பதை மட்டும் நாம் நினைக்கிறோம். மரணத்தின் மறுபக்கம் என்ன?நம் அன்புக்குறியவர்களை நம்மிடமிருந்து பிரிக்கும் மரணத்தின் மறுபக்கம் ஒன்று உள்ளது என்பது நாம் பலரும் அதிகம் யோசிக்காத ஒன்று. என் தாயின் மரணம் எனக்கு அதை மிக நன்றாகக்காட்டியது.
அதிகம் பேசாத மென்மையான (புதுமைப்பெண்களிடமிருந்து சுத்தமாக மாறுபட்ட)என் அன்புத்தாயின் மரணம் போன சனி இரவு நிகழ்ந்தது.இப்படிக்கூட இறக்க முடியுமா என்ரு தோன்றியது எனக்கு?
அவர் எங்கோ அடுத்த ஊருக்குப்போவது போல இருந்தது,தொலை தூரப்பயணம் போவது போலக்கூட இல்லை.
மரணத்தை ஆவலுடன் அணைத்துக் கொள்ள மனம் ஆசைப்படுமோ? என் அம்மாவின் மனம் ஆசைப்பட்டது.
அவர் இதயம் விரிவடைந்தவர்(heart enlargement)இரத்த அழுத்தம் உள்ளவர். ஆனால் பலகாலமாக இரத்த அழுத்தமும் ,heart enlargement ம் இருந்து வந்ததால் மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார்.போன மாதம் முதல் உடல் நிலை நலம் குறைய ஆரம்பித்து மிக பலகீனமாக இருந்தார்.
மிக பலகீனமாக ஆகி விட்டபின் நடமாட்டம் குறைந்தது. உடல் நலம் குறைந்ததாலும் மனநலம் மிக்கவராக இருந்தார்.தன் கண்ணையும் தானமாகக்கொடுக்கச் சொல்லி விட்டுப்போன எந்தாயின் மன திடத்தை எண்ணிஎண்ணி வியக்கிறேன்!
தன் பிள்ளைகளுக்குத் தொல்லை தராமல் தான் கடவுளிடம் போய்ச்சேர ஓயாமல் பிரார்த்திதார்.
மாலை நாலு மணியளவில் படுக்கையில் கையை ஊன்றி எழுந்தார்.கலைந்திருந்த கூந்தலை சரி செய்யச் சொன்னார்.புடவையைச்சீர் செய்து கொண்டார்.பக்கத்திலிருந்த எல்லா மகன் மகள்களையும் பார்த்தார்.அனைவரையும் பார்த்து ஒவ்வொருவராக அருகிலழைத்தார்.ஒவ்வொருவரின் தலையில் கையை வைத்து ஆசிர்வாதம் வழங்கினார்.வாயார வாழ்த்தினார்.மிகவும் களைப்பாக இருப்பதாகக் கூறிவிட்டு எவரும் அழக்கூடாது எனக்கூறினார்.அதற்குப் பின் சரியாக ஒரு மணி நேரத்தில் சுவாசம் நின்றது.வலி என்றும் பிரிகிறோமே என்ற துன்பமென்றோ கொஞ்சம்கூடச் சொல்லவில்லை.எல்லொரும் தன்னால் துன்பப்படக்கூடாது என்றுமட்டும் நினைத்த என் தாயின் மரணம் என்னை உலுக்குகிறது.எங்கோ பக்கத்திலுள்ள ஊருக்குப்போவது போல எல்லொரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிப்போன என் தாயைப்போல மரண பயமின்றி மரணத்தை ஆவலுடன் தழுவியவர்கள் எவரும் உண்டோ?

ஓட்ஸோ.......... ஓட்ஸ்!
காலையுணவாக ஓட்ஸ் சாப்பிடுவது என்பது ஒரு கொள்கையாகவே ஆகி வரும் இன்னாட்களில் ஓட்ஸ் தயரிப்பதில் சில முறைகளைத் தெரிவிப்பது நல்லதாயிருக்கும் எனத் தோன்றியதன் விளைவு இந்தப்பதிவு.ஓட்ஸை அப்படியே தண்ணீரில் கொதிக்க வைத்து பால் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடுவதும் ,சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவதும் பழக்கமாக உள்ளது.ஓட்ஸை மிக்சியில் பொட்டு நன்றாகப்பொடி செய்து விட்டு அதை கொதிக்கவைத்து சாப்பிடுவது கொஞசம் எளிமையாக இருக்கும். மொந்தையாக ஓட்ஸ் கூழ் ஆகாமல் இருக்க உதவும்.ஓட்ஸை பொடி செய்து மொத்தமாக ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்துக்கொள்ளலாம்.ஓட்ஸ் கூழ் தயாரித்த பின் அதில் மோர் விட்டு உப்பு போட்டும் சாப்பிடலாம். அல்லது அந்தக்கூழில் கொஞ்சம் ஒமம் போட்டு உப்பிட்டு சாப்பிட்டால் சிலருக்குப் பிடிக்கும்.ஓட்ஸ் கூழ் தயரித்தபின் அதில் உப்பு செர்த்து காரட், சிறிது கோஸ் பொன்ற மெல்லிய காய்கறிகளை வதக்கிப்போட்டால் நல்ல காலையுணவு என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் காய்கறிகள் அளவு கொஞ்சமாக இருக்க வெண்டும். நிறைய காய்கறிகள் போட்டால் இலேசாக இல்லாமல் heavy ஆக ஆகிவிடும்
Tuesday, December 11, 2007
கண்ணே பாரதி!
காலம் முன்னோக்கி ஒடுகிறது. நினைவுகள் மட்டும் பின்னோக்கி ஒடுகின்றன!பள்ளிப்பருவமாயிருக்கட்டும் அப்புறம் வளர்ந்த பருவங்களாயிருக்கட்டும் பாரதி என்ற மந்திரச்சொல் என்னை கவர்ந்து இழுக்கும் ஒரு காந்தச் சொல்லாகவே இருந்திருக்கிறது.எனக்கு அமைந்த பள்ளியும், ஆசிரியர்களும் காரணமா இல்லை எனது மனதை ஈர்க்குமொரு சகாப்தமாக பாரதியின் பாடல்கள் இருந்தது காரணமா என்று சொல்லமுடியாதபடி ஒரு நிலமை.அப்போவெல்லாம் பள்ளியில் பாரதி பிறந்த தினத்தன்று, பாரதியார் பாடல்களில் அதிக வரிகளை யார் ராகத்தோடு பாடுகிறார்களோ அவர்களுக்குத்தான் பாட்டுப் போட்டிகளில் முதற்பரிசு.பாரதியைப் பற்றி பேச்சுப்போட்டிகளில் பேசவேன்டும்.தலைப்புகள் பலவிதமயிருக்கும். பாரதியும் கண்ணனும்,பாரதியும் ஒறுமைப்பாடும்,பாரதியும் தமிழும், பாரதியும் நாட்டுப்பற்றும், பாரதியும் சுதந்திரமும், பாரதியும் பெண்ணும் என்றூ.போட்டிக்கு சில நிமிடங்களுக்கு முன்தான் தலைப்பு கொடுக்கப்படும். மிகவும் திகிலாயிருக்கும். பேச்சுப்போட்டி என்றாலே எல்லார் கவனமும் என் பக்கம். பாரதி பற்றிப் பேச கசக்குமா என்ன?பாரதியார் பாடலோடு நான் பேச்சுப்போட்டிக்கு பேச ஆரம்பித்தவுடனேயே என் ஆசிரியர்கள் மற்றும் எனது போட்டிகளில் சேராத கூடப்படிக்கும் மாணவிகளிடம் ஒரு கைதட்டலுடன் கிடைக்கும் ஊக்கம் கலந்த வாழ்த்துக்கள்.ஆஹா!எவ்வளவு இனிய மாலைப்பொழுதுகள் அவை!நிமிர்ந்து உட்கார்ந்து தலைமை ஆசிரியரைப் பார்க்கும் தமிழாசிரியரின் பார்வையில் இவள் என் மாணவி என்ற பெருமிதம் தொனிக்கும். நான் இன்னேரம் பாரதியாகவே மாறி”சிந்து நதியின் மிசை நிலவில் சேர நன்னாட்டிளம் பெண்களுடன்”போய்க்கொண்டிருப்பேன்.கூடவே என் பள்ளியினரையும் அழைத்துப்போகும் தன்மை அந்தப் பாட்டுக்கு இருக்கும். “தொன்று நிகழ்ந்ததனைத்துமுணர்ந்திடும் சூழ் கலைவாணர்களும் “பாரதத்தின் ஆரம்பம் தெரியாமல் தடுமாறுவார்கள்.கணிரென்ற குரலில் நான் பாடி பாரதி பற்றிப்பேசியதை அந்தப்பள்ளி ரசித்ததை இப்போதும் என் கண்கள் பனித்திட நினைவு கூறுகிறேன். “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்”அப்பப்பா!என்ன ஒரு தீர்க்க தரிசனம்!மெய் சிலிர்க்கிறது. கண்ணே பாரதி! நீ கண்ட கனவு நினைவாகி விட்டதடா!இனியொரு விதி செய்வோம் என்று நாங்கள் கிளம்பி விட்டோம். காணி நிலம் வேண்டும் என்று பராசக்தியுடன் மல்லுக்கு நின்றாயே! பலகாணி நிலங்களை பெற்று விட்டோம்! நீ மட்டும் இல்லையென்றால் உன் பாட்டு மட்டும் எங்களுக்குத் தெரியாமல் இருந்திருந்தால் , இவ்வளவு கஷ்டப்பட்டு கிடைத்தது இந்த சுதந்திரம் என்று என் போல சாதரணப்பெண்களுக்குத் தெரியாமலேயே போயிருக்கும்!முண்டாசு கட்டின முனிவனே உனக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
தமிழ்த்தாய் வாழ்துடன் கூட்டம் முடியும்போது பரிசுகள் அறிவிப்பில் கடைசி பஷமாக எனக்கு நான்கு பரிசுகள் இருக்கும்.பரிசுகளைவிட பாரதியின் நினைவுகளைச் சுமப்பது பேரின்பமாக இருக்கும் எனக்கு!இந்த நினைவுகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதே மிகவும் பெருமையாக இருக்கிறது!வாழ்க பாரதி நாமாம்!வளர்க நம் தமிழ்!

Sunday, November 25, 2007
ராமாயணம் கண்ட ராமேஸ்வரம்
நானும் என் கணவரும் போன வருடம் ராமேஸ்வரம்,தனுஷ்கொடி மற்றும் பல இடங்களூக்குச் சென்று வந்தோம்.வெகு காலமாக நாங்கள் போக நினைத்திருந்த இடங்களில் ஒன்று இந்த ராமேஸ்வரமும்.விடியற்காலை ராமனாதபுரத்தை அடைந்தோம்.அங்கிருந்து ஒரு டாக்சி ஏற்பாடு செய்து கொண்டு தேவிப்பட்டினத்தை அடைந்தோம். அங்கு ஒரு வீட்டில் தங்கிகொண்டு குளித்து முடித்து சுத்தமாகப்போய்
நவபாஷாண நவகிரகத்தை பூசை செய்து விட்டு(இந்த நவகிரகத்தைதான் ராமர் பூசை செய்து வழிபட்டு தோஷங்கள் நீங்கப்பெற்றார் என்பது ஐதீகம்) . அங்கிருந்து திருப்புல்லணிக்குச்சென்றோம். திருப்புல்லாணியில் ராமர் படுத்திருந்த கோலத்திலிருந்தார்.அவர் சீதையைப்பிரிந்து மிக்க வருத்ததுடன் , சீதையை அடைவது எப்படி என சிந்திக்கும் திருக்கோலம் எங்களை மிகவும் சிந்திக்க வைத்தது ராமாயணத்தைப்ப்பற்றி.அங்கு படுத்த வண்ணம்தான் திட்டங்கள் தீட்டுகிறார் ராமர் என்று சொன்னார்கள். அனுமனும், சுக்ரீவனும் மற்ற துணைகளும் சூழ கோலம் கொன்டிருக்கும் ராமனைக்கன்டோம். அங்கிருந்து ராமேஸ்வரம் கிளம்பினோம். மாலை ராமேஸ்வரம் போய்ச் சேர்ந்து விட்டோம்.ராமேஸ்வரம் செல்லும் பாதையிலிருக்கும் பாலமும் அதன் அழகும் சொல்லி மாளாது. அந்த பாலத்தில் நாம் பயணிக்கும் போது சுற்றித்தெரியும் இடங்களெல்லாம் கடல் சூழ்ந்திருப்பது மிக அழகு.இயற்கையை ஏன் இவ்வளவு கவிஞர்கள் புகழ்ந்திருக்கிறார்கள் என்பது அந்த இடங்களைப் பார்க்கும்போது தெரிகிறது.
மறுநாள் காலை ராமேஸ்வரத்தில் நாங்கள் முன்னோர்களுக்குச் செய்ய வேன்டிய காரியங்களைச் செய்து விட்டு (இந்துக்கள் ராமேஸ்வரத்தில் முன்னொர்களுக்குச் செய்வது வழக்கம்)அன்று மாலை ராமேஸ்வரத்திலுள்ள ராமனாதர் கோவில் , கந்தர்வ மலைக்கு(இந்த மலை மீது நின்றுதான் ஹனுமன் கடலைப்பர்த்ததாகவும்,அங்கிருந்துதான் தாவி இலங்கைக்குப் போனதாகவும். ராமாயணம் சொல்கிறது)சென்றோம் . அந்த மலை மீது நாங்கள் நின்று பார்த்துக்கொன்டிருந்த போது எங்கள் மகனிடமிருந்து(அவன் வெளிநாட்டில் இருக்கிறான்) மொபைலில் போன் வந்தது. அவன் சின்னக்குழந்தையைப்போல் அந்தமலை மேலிருந்து இலங்கை தெரிகிறதா என்று கேட்டான்.(சிறு வயதில் படித்த அமர்சித்ர கதாவின் தாக்கம்)அங்கிருந்து பார்த்தால் சிறுசிறு தீவுகள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தெரிகின்றன. ஒருவர் நன்கு நீந்தத்தெரிந்தவராக இருந்தால் விட்டுவிட்டு நீந்தி விடலாம் போலத்தான் தோன்றியது. ராமாயணம் படித்தவர்களுக்கு மயிர்கூச்செரியும் அனுபவங்ககள் தரும் இடம் இந்த ராமேஸ்வரம். மற்றும் சில இடங்களுக்குப் போய் விட்டு அன்று இரவு ஓய்வெடுத்து நன்றாகத்தூங்கினோம்.
மறு நாள் காலை ராமனாதர் கோவிலுக்குச் சென்று மரகத லிங்கத்தை தரிசனம் செய்து விட்டு(காலை 4மணி முதல் 5 மணி வரைதான் இந்த லிங்கத்தை வெளியில் வைத்து பூசை செய்வார்கள்)வந்தோம். ராமேஸ்வரம் ராமனாதர் கோவில் என்பது ஒருவர் வாழ்நாளில் பார்க்க வேன்டிய ஒரு கோவில்.மிகப்பெரிய கோவில். பல சன்னதிகள். அழகிய வேலை பாட்டுடன் கூடிய ஒப்பற்ற மன்டபங்கள்.கடலை நோக்கி அமைந்திருக்கும் இந்த கோவில் ஒரு அற்புதமான படைப்பு.
ராமேஸ்வரம் ஒரு தீவு .அதன் முக்கிய ஜீவாதாரத்தொழிலே மீன்பிடிக்கும் மீனவர் தொழில்தான். கடல்தான் இவர்களுக்கு கடவுள்,தாய்.தந்தை எல்லாம்.எங்கு பார்த்தாலும் மீன் வாடை அடித்துக்கொன்டேதான் இருக்கும். கடற்காற்றும், மீன்வாடையும் இங்குள்ளவர்களுக்கு, இல்லாமலிருக்க முடியாது என்பது போல மூச்சோடு கலந்த ஒரு விஷயம்.கிளிஞசல்களில் வேலைபாடுகள் செய்து பல விதமான பொருட்களைச் செய்து விற்பது பலருடைய தொழில்.சுற்றுலாப்பயணிகள் இந்த ஊரின் மிகப்பெரிய வருமான
சாதனம்.மறுநாள் எழுந்து ஜீப்பில் தனுஷ்கோடிக்குப் பயணமானோம்.ஜீப் கடல் மணலில் ஓடியது.
ஜீப்பில் போகும்போது நாலு புரமும் எங்கு நோக்கினும் மணல்..மணல்..அதைப்போல பிரம்மான்டமான மணல் வெளியை நான் சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன். இடையிடையெ ஆங்காங்கு சிறிய கூடரம் போன்ற அமைப்புகள். மீனவர்களின் இருப்பிடங்கள் என்று கூட வந்தவர் சொன்னார். அங்கு எங்கள் மொபைல் வேலை செய்ய வில்லை,டவர் இல்லாத காரணத்தால்.மேலே இந்திய ராணுவ கடற்படை விமானங்கள் பறந்த வண்ணமிருந்தன. இடையிடையே சிலர் கையில் குழந்தையுடனும், மூட்டை முடிச்சுக்களுடனும் வந்து அந்த அத்வானத்தில் நின்று கொன்டிருப்பதையும், நடந்து வருவதையும் பார்த்தோம்.அவர்கள்தான் இலங்கைத் தமிழர்கள் என்றும்,திருட்டுப் படகில் இரவில் கிளம்பி, இலங்கையிலிருந்து வந்து இறங்கி அந்த கடல் மணலில் நடந்து வந்து கொன்டிருக்கிறார்கள், என்றும் எங்களுடன் வந்தவர் கூறினார். எங்களுக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது அவர்களைப் பார்க்க.
ஆனால் சிறிது நேரத்திலேயே அங்கு ஒரு ராணுவ விமானம் பறந்தது. எங்களுடன் கூட வந்தவர் ராமெஸ்வரத்தைச்சேர்ந்தவர்.அவருக்கு இது ஒரு புதுமையானதாகவே இல்லை.
இன்னும் சற்று நேரத்தில் ராணுவம் வந்து இந்த அகதிகளை அழைத்துச் சென்று விடும் என்று கூறினார்.எங்களுக்கு இந்த சூழ்நிலை மிகவும் வினோதமாக இருந்தது.
சற்று தூரம் சென்றவுடன் கோதண்ட ராமர் கோவில் .வந்தது.அங்குதான் விபிடணனுக்கு ராமர் சரணகதி தந்ததாகவும்,இலங்கையிலிருந்து திரும்பி வரும்போது அவருக்கு பட்டபிஷேகமும் அங்குதான் நடத்தினதாகவும் கூறினார்கள்.
அங்கிருந்து கிளம்பி திரும்ப ஜீப்பில் பயணித்தோம். 15 நிமிடத்தில் தனுஷ்கோடியை அடைந்தோம்.வெட்ட வெளி, நான்கு புறமும் கடல்,கடல் காற்று,கடல் நீர் கண்ணுக்கெட்டிய தூரம் வரை,உதித்து வரும் இளம் சூரியஒளி,திரும்பிப்பார்த்தால் நிலம்கற்பனை பண்ண முடியாத ஒரு சுழல். ஐம்பெரும் சக்திகளும் மட்டும் சாட்சியாக நானும் என் கணவரும் கை பிடித்தபடி கடலில் நீராடினோம். கடல் அலைகள் எங்களை நீராட்டி மேலும் மேலும் துய்மை படுத்துவதாக உணர்ந்தோம்.அந்த அனுபவத்தை யாரும் சொல்லால் விளக்க முடியாது.கடலுக்கும் பூசை செய்து ,பிறகு மணலினாலேயே லிங்கம் பிடித்து வைத்து கையில் எடுத்துப் போயிருந்த பூசைப்பொருட்களை வைத்து அந்த லிங்கத்துக்கு பூசை செய்தோம்.
ராமாயணத்தை விரும்பிப்படிக்கும் எங்கள் பேரக்குழந்தைகள் இல்லையே என்று மிகவும் நினைத்துகொன்டோம்.சில நிமிடங்கள் எங்களை மறக்கச் செய்தது அந்த சூழ்நிலை.
ராமர் இருந்தாரா? அது கதையா என்ற சந்தேகங்கள் சற்றும் எழவில்லை. ராமர் இங்குதான் நின்றார் ,இங்குதான் நின்று கடலைப்பார்த்து இலங்கைக்குப்போக திட்டமிட்டார் என்று எண்ணுபோது அந்த மக காவியம் கண்முன் ஒருமுறை நிகழ்வது போல் இருந்தது. இங்குதான் ராமரும் சீதையும் இலங்கையிலிருந்து திரும்பி வரும்போது சிவனை வழி பட்டர்களாம்.
பின் நாங்கள் மற்றும் சில இடங்களுக்குச்சென்று விட்டு சென்னை திரும்பி வெகு நாட்களுக்குப் பின்னும் மனதை விட்டு அகலாமல் நேற்று நடந்தது போல் இருக்கிறது அந்த ராமேஸ்வரம் ,தனுஷ்கோடி பயணம்.

Subscribe to:
Comments (Atom)