Monday, March 10, 2008

புதுமைப்பெண்கொடி

நாலு மாதம் முன்பு மதுரை போயிருந்தேன். தம்பி வீட்டில் இரண்டு நாள் தங்கி விட்டு வந்தேன். அவன் வீடு மதுரையில் ஒரு தனி வீடு, வீட்டைச்சுற்றி தோட்டம். தம்பியும் தம்பி மனைவியும் அழகிய தோட்டத்தை உருவாக்கியிருந்தார்கள்.எல்லாவிதமான மலர்களும் கொத்து கொத்தாகப் பூத்திருந்தன. பார்க்கவே ஆசையாக இருந்தது.அதில் சீக்க்கிரமே முளைக்கக்கூடிய சங்குச்செடியின் விதைகளைப் பறித்துப்பையில் போட்டுக்கொண்டு சென்னை வந்தேன்.சென்னைக்கு வந்ததும் சங்குச்செடி விதைகளை ஒரு தொட்டியில் மண் போட்டு நீர் ஊற்றி ஊன்றி வைத்தேன். ஒரு மாதகாலம் தண்ணிர் ஊற்றியபின் மெதுவாகச்செடி முளைத்து வர ஆரம்பித்தது.மெதுவாக இரண்டு இலகள் நான்கு இலைகள் என்று வளர ஆரம்பித்தது. ஏழெட்டு இலைகளும் விட்டு கொஞ்சம் கொடியும் வளர்ந்தபின் கொடி நுனி அறுந்து விடப்போகிறதே என்று ஒரு கொம்பைப்பக்கத்தி வைத்தேன். கொடியும் மேலே வளர்ந்ததே தவிர கொம்பைச்சுற்றிக் கொள்ளவே இல்லை. எனக்கோ ஒரே ஆச்சரியம்.நான் பார்த்தவரை கொடி நீளமாக வளரத்தொடங்கியவுடனேயே பக்கத்திலிருக்கும் எந்த ஒரு பற்றுதலையும் கொடிகள் சுற்றிக்கொள்வது இயல்பாக நடக்கும் ஒன்றுதானே?இந்தக்கொடி என்னவோ இரண்டு மூன்று நான்கு அடிகள் என்று வளர்கிறது ஆனால் கொம்பை சுற்றிக்கொள்ளவேஇல்லை. பக்கத்திலிருக்கும் கிரில் (grilல்)மீதும் படர வில்லை.இப்போது இன்னும் சில கிளைகள் அதே செடியிலிருந்து வளர்கின்றன. அவைகள் ஒன்றை ஒன்று சுற்றிக்கொள்கின்றன.கொம்பை நாடாத கொடியாக இந்த சங்குச் செடியைப் பார்த்தவுடன் அந்தச்செடிக்கு புதுமைப்பெண் என்று பெயரிடத் தோன்றியது எனக்கு. சரிதானே?

ஒரு தாயின் மரணம்

மரணம் நம் சொந்த பந்தங்களை நம்மிடமிருந்து பிரிக்கிறது என்பதை மட்டும் நாம் நினைக்கிறோம். மரணத்தின் மறுபக்கம் என்ன?நம் அன்புக்குறியவர்களை நம்மிடமிருந்து பிரிக்கும் மரணத்தின் மறுபக்கம் ஒன்று உள்ளது என்பது நாம் பலரும் அதிகம் யோசிக்காத ஒன்று. என் தாயின் மரணம் எனக்கு அதை மிக நன்றாகக்காட்டியது.
அதிகம் பேசாத மென்மையான (புதுமைப்பெண்களிடமிருந்து சுத்தமாக மாறுபட்ட)என் அன்புத்தாயின் மரணம் போன சனி இரவு நிகழ்ந்தது.இப்படிக்கூட இறக்க முடியுமா என்ரு தோன்றியது எனக்கு?
அவர் எங்கோ அடுத்த ஊருக்குப்போவது போல இருந்தது,தொலை தூரப்பயணம் போவது போலக்கூட இல்லை.
மரணத்தை ஆவலுடன் அணைத்துக் கொள்ள மனம் ஆசைப்படுமோ? என் அம்மாவின் மனம் ஆசைப்பட்டது.
அவ‌ர் இத‌ய‌ம் விரிவடைந்த‌வ‌ர்(heart enlargement)இர‌த்த‌ அழுத்த‌ம் உள்ள‌வ‌ர். ஆனால் ப‌ல‌கால‌மாக‌ இர‌த்த‌ அழுத்த‌மும் ,heart enlargement ம் இருந்து வந்த‌‌தால் மாத்திரைக‌ள் சாப்பிட்டு வந்தார்.போன‌ மாத‌ம் முத‌ல் உட‌ல் நிலை ந‌ல‌ம் குறைய‌ ஆர‌ம்பித்து மிக‌ ப‌ல‌கீன‌மாக‌ இருந்தார்.
மிக‌ ப‌ல‌கீன‌மாக‌ ஆகி விட்ட‌பின் ந‌ட‌மாட்ட‌ம் குறைந்த‌‌து. உட‌ல் ந‌ல‌ம் குறைந்ததாலும் மனந‌‌ல‌ம் மிக்க‌வ‌ராக‌ இருந்தார்.தன் கண்ணையும் தானமாகக்கொடுக்கச் சொல்லி விட்டுப்போன எந்தாயின் மன திடத்தை எண்ணிஎண்ணி வியக்கிறேன்!
தன் பிள்ளைகளுக்குத் தொல்லை தராமல் தான் கடவுளிடம் போய்ச்சேர ஓயாமல் பிரார்த்திதார்.
மாலை நாலு மணியளவில் படுக்கையில் கையை ஊன்றி எழுந்தார்.கலைந்திருந்த கூந்தலை சரி செய்யச் சொன்னார்.புடவையைச்சீர் செய்து கொண்டார்.பக்கத்திலிருந்த எல்லா மகன் மகள்களையும் பார்த்தார்.அனைவரையும் பார்த்து ஒவ்வொருவராக அருகிலழைத்தார்.ஒவ்வொருவரின் தலையில் கையை வைத்து ஆசிர்வாதம் வழங்கினார்.வாயார வாழ்த்தினார்.மிகவும் களைப்பாக இருப்பதாகக் கூறிவிட்டு எவரும் அழக்கூடாது எனக்கூறினார்.அதற்குப் பின் சரியாக ஒரு மணி நேரத்தில் சுவாசம் நின்றது.வலி என்றும் பிரிகிறோமே என்ற துன்பமென்றோ கொஞ்சம்கூடச் சொல்லவில்லை.எல்லொரும் தன்னால் துன்பப்படக்கூடாது என்றுமட்டும் நினைத்த என் தாயின் மரணம் என்னை உலுக்குகிறது.எங்கோ பக்கத்திலுள்ள ஊருக்குப்போவது போல எல்லொரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிப்போன என் தாயைப்போல மரண பயமின்றி மரணத்தை ஆவலுடன் தழுவியவர்கள் எவரும் உண்டோ?

ஓட்ஸோ.......... ஓட்ஸ்!

காலையுணவாக ஓட்ஸ் சாப்பிடுவது என்பது ஒரு கொள்கையாகவே ஆகி வரும் இன்னாட்களில் ஓட்ஸ் தயரிப்பதில் சில முறைகளைத் தெரிவிப்பது நல்லதாயிருக்கும் எனத் தோன்றியதன் விளைவு இந்தப்பதிவு.ஓட்ஸை அப்படியே தண்ணீரில் கொதிக்க வைத்து பால் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடுவதும் ,சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவதும் பழக்கமாக உள்ளது.ஓட்ஸை மிக்சியில் பொட்டு நன்றாகப்பொடி செய்து விட்டு அதை கொதிக்கவைத்து சாப்பிடுவது கொஞச‌ம் எளிமையாக இருக்கும். மொந்தையாக ஓட்ஸ் கூழ் ஆகாமல் இருக்க உதவும்.ஓட்ஸை பொடி செய்து மொத்தமாக ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்துக்கொள்ளலாம்.ஓட்ஸ் கூழ் தயாரித்த பின் அதில் மோர் விட்டு உப்பு போட்டும் சாப்பிடலாம். அல்லது அந்தக்கூழில் கொஞ்சம் ஒமம் போட்டு உப்பிட்டு சாப்பிட்டால் சிலருக்குப் பிடிக்கும்.ஓட்ஸ் கூழ் த‌ய‌ரித்த‌பின் அதில் உப்பு செர்த்து கார‌ட், சிறிது கோஸ் பொன்ற‌ மெல்லிய‌ காய்க‌றிக‌ளை வ‌த‌க்கிப்போட்டால் ந‌ல்ல‌ காலையுண‌வு என்ப‌தில் சந்தேக‌மே இல்லை. ஆனால் காய்க‌றிக‌ள் அள‌வு கொஞ்ச‌மாக‌ இருக்க‌ வெண்டும். நிறைய காய்கறிகள் போட்டால் இலேசாக‌ இல்லாம‌ல் heavy ஆக‌ ஆகிவிடும்