Sunday, September 23, 2007

தமிழ் எந்தன் உயிருக்கு நேர்

தமிழைப்பற்றிப் பேச்சு வந்தவுடன் எனக்கு என் பள்ளிப்பருவம்தான் ஞாபகம் வருகிறது. நான் (1967க்கு முன்) பள்ளியில் படித்த நாட்களில் எனக்கு தன்டபாணி தேசிக‌ர் என்னும் த‌மிழ் ஆசிரிய‌ர் இருந்தார்.அவ‌ர் எங‌ள் எல்லொரையும் தூய‌ த‌மிழில் பேசச்சொல்லி மிக வற்புறுத்துவார்.இலக்கணபாடங்களை மிக அழகாக உவமையுடன் எடுதுக்கூறுவார்.கையெழுது கூட எப்படி எழுதுவது என்று மிக அழகக எடுத்துக்கூறி எழுத வைப்பார்.அவருக்கும் சமசஸ்க்ருத ஆசிரியருக்கும் அடிக்கடி விவாதம் வந்து விடும்.மாணவிகளில் சிலர் அந்த த‌மிழ் ஆசிரியரின் தீவீர பகதைகள் என்றால் மிகை ஆகாது.
வீட்டில் எல்லொரும் வெறுப்படையும் வகையில் தமிழ் ஆசிரியரைப்பற்றியும் அவர் கூறிய கருத்துக்களையும் விலா
வாரியாகப்பெசுவது வழக்கமாயிருந்தது.இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும்.
உறவினர்களுக்குக் கடிதம் எழுதும்போது நான் கமலா என்று கையெழுத்திடாமல் செந்தாமரை என்று கையெழுத்து போடுவேன் என்றால் எவ்வளவு தீவிரமக நாங்கள் தமிழ் மீது பற்று வைத்திருந்தோம் என்று புரியும்.உறவினர்கள் ஒரு மாதிரியாகப் பார்க்கும் அளவுக்கு இந்த த‌மிழ் பற்று இருந்தது என்றால் மிகையாகாது.
அப்பிடி இருந்த என்னை இந்த சென்னை மாந‌கரம் இப்பிடி மாற்றி விட்டது.
முதலில் சென்னை வந்தவுடன் நான் கற்றுக்கொன்ட முதல் சொல் கிருஷ்ணாயில்.மண்ணெண்ணை என்று அழகாக சொல்லிக்கொன்டு சென்னை வந்த என்னை கெரொசின் என்ற ஆங்கில‌ வார்த்தையின் திரிபான கிருஷ்ணாயில் பிடித்தது முதலில்.கொஞ்சம் கொஞ்சமாக சென்னைத்தமிழ் பயின்றோம்
மெதுவாக சென்னை வாசியாகி சென்னைத்தமிழுக்கு பழக்கப்பட்ட எங்களை
திரும்ப நல்ல தமிழ் கற்றுக்கொள் என்று சொன்னல் எப்பிடி திடீரென்று மாறுவது .
வாழ்க்கையில் துன்பம் வந்தால் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேன்டும்.பொதுவாக துன்பம் என்று வந்து விட்டால் நமக்கு மட்டும்தான் துன்பம் என்று நினைத்து செயலிழந்து பொகக்கூடாது.மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு துணிவு வேன்டும். இவர்கள் என்ன நினைப்பபார்களோ என்று தயங்கக்கூடாது .அத‌ற்காக எல்லோரிடமும் சொல்லிப் புலம்புவதிலும் பயனில்லை. நமக்கு நம்பிக்கைக்கு உரிய ஒரு நபரிடம் சொல்லிக் கலந்தாலோசிக்கலாம்.அவர்கள் அவர்களுக்குத்தெரிந்த எதாவது ஒரு வழியைச்சொல்லலாம்.அதை முயற்சி செய்யலாம், அதுவெ நல்ல வழியாக‌க்கூட அமைந்து விடலாம்.அது அப்படி தீர்வு காணும்படி அமையா விட்டாலும் எதாவது ஒரு சின்ன யுக்தியை கையாள நமக்கு உற்சாகத்தை அளிக்கலாம். நம்மொடு இந்த பிரச்சினையைப்பறிப் பேச ஒருவர் இருக்கிறார் என்பதே ஒரு பெரிய தெம்பு .பெரும்பாலும் மனச்சோர்வே துயரங்களைப் பெரிதாக்குகிறது.துயரம் வந்து விட்டது இனி மீளவே முடியாது என்று இடிந்து போய் உட்காராமல்
தீர்த்துக்கொள்வது என்ற நிலைக்கு பகிர்ந்து கொள்ளும் பழக்கம்தான் முதல் படி.எல்லொருக்கும் ஏதொ ஒரு வகையில் குழப்பம் அல்லது துன்பம் இருக்கும்.தனக்கு மட்டுதான் இப்படி வந்துள்ளது என்று நினைத்து எப்பொதும் சோகமாக அல்லது வழ்க்கையில் பிடிப்பில்லமல் நடப்பது தேவையில்லாதது.மிக எளிதாக தீர்த்துக்கொள்ள முடியும் என்று மற்றவர் நினைக்கும் பிரச்சினைகளைக்கூட‌ நமக்கென்று வந்து விட்டால் செயலிழந்து போகிறோம். கடவுளை வேன்டிக்கொள் நல்ல தீர்வு கிடைக்கும் என்று பெரியவர்கள் கூருவர்கள். கடவுளிடம் கூறும்போதே ந‌ம்மிடமும் ஒரு முறை நாமாகவே சொல்கிறோம் அல்லவா? நம்ம் உள் ம‌ன‌தெ கூட‌ இன்னொரு ஆளின் இட‌த்தில் இருந்து தீர்வுக்கு யோச‌னை வ‌ழங்க‌க்கூடும்.
ஆக‌வே மா‌ற்றி மா‌ற்றி எதாவது யுக்திகளைக் கையாள வேன்டும்.மனமிடிந்து போகக்கூடது,துன்பமாகவே ஒருவரின் வாழ்க்கை பூராவும் இருந்த்து விடாது. இன்பமனதாகவேயும் இருக்காது.துன்பத்துக்கப்புறம் இன்பம் நிச்சயம் வரும் என்ற நம்பிக்கையெ நிஜம்.

Monday, September 10, 2007

படிப்பது ராமாயணம்.......
.ஒரு நாள் கடுமையான தலைவலி. தாங்க முடியவில்லை.தனியே அவதிப்பட்டுக்கொன்டிருக்கிறோம். சட்டென்று பக்கத்தில் ஒருவர் மத்திரை ஒன்றை எடுத்துக்கொடுத்து தண்ணீர் கொடுத்தால் தேவலையாகிவிடும். ஆனால் இந்த சிறிய செயலை செய்து கொள்ளத்தெரியாமல் அவதிப்படுவது பெரும்பலும் நடக்கும் விஷயம்தான்.இந்த குறிப்பிட்ட மேற்கோள் இது மிகச்சிறிய விஷயம்,ஆனால் பெரிய பெரிய விஷயஙளில் கூட இதே அளவு உதவி இருந்தால் பெரிய தீர்வுகள் கிடைக்கும்.சின்ன மற்றும் பெரிய ப்ரச்சினைகளுக்கு மற்றவர் ஒரு சிறிய கைத்தூக்கல் தூக்கி விட்டால்பிரச்சினை தீர்ந்து விடும்.அனுமனுக்கு ஒரு ஜாம்பவான் இருந்ததால்தான் சுந்தரகான்டம் ராமாயணத்தில் உருவாயிற்று.அனுமனைக் கடலைத்தான்ட வைக்க ஜாம்பவனின் ஒரு சிரு ஊக்கம்தான் காரனமாயிற்று.அனுமன் கடல் தாண்டாவிட்டால் ராமாயணம் ஏது? ஒவ்வொருவீட்டிலும் ஒவ்வொரு ஊரிலும் பல ஜாம்பவான்கள் இருந்தால் நன்றாயிருக்குமே!ஒவ்வொருவரும் ஜாம்பவனாக மாறுவதைத்தான் ராமாயணம் எதிர் பார்க்கிறது.ஏன் மாற முடியவில்லை?ஏன் செய்யவில்லை? ஏன் பழக்கப்படுத்திக்கொள்ள வில்லை?மனதால்,உடம்பால்,வார்த்தையால் உதவுவது என்பது பழக்கம்தான் காரணம்.பழக்கப்படுத்திகொள்வோம் பிரதி பலன் எதிர் பார்க்காமல் உதவுவதை.
இதொ ஒரு இனிய கதவு திறக்கிறது.கதவுகள் திறக்கட்டும். காற்று வீசட்டும்.கண்ணுக்கு மலர்களும் கொடிகளும் தெரியட்டும்.இருட்டை விட்டு வெளியெ வரலாம் நாம்.அழகிய உலகம் ஒன்றைகாண்போம்!