வாழ்க்கையில் துன்பம் வந்தால் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேன்டும்.பொதுவாக துன்பம் என்று வந்து விட்டால் நமக்கு மட்டும்தான் துன்பம் என்று நினைத்து செயலிழந்து பொகக்கூடாது.மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு துணிவு வேன்டும். இவர்கள் என்ன நினைப்பபார்களோ என்று தயங்கக்கூடாது .அதற்காக எல்லோரிடமும் சொல்லிப் புலம்புவதிலும் பயனில்லை. நமக்கு நம்பிக்கைக்கு உரிய ஒரு நபரிடம் சொல்லிக் கலந்தாலோசிக்கலாம்.அவர்கள் அவர்களுக்குத்தெரிந்த எதாவது ஒரு வழியைச்சொல்லலாம்.அதை முயற்சி செய்யலாம், அதுவெ நல்ல வழியாகக்கூட அமைந்து விடலாம்.அது அப்படி தீர்வு காணும்படி அமையா விட்டாலும் எதாவது ஒரு சின்ன யுக்தியை கையாள நமக்கு உற்சாகத்தை அளிக்கலாம். நம்மொடு இந்த பிரச்சினையைப்பறிப் பேச ஒருவர் இருக்கிறார் என்பதே ஒரு பெரிய தெம்பு .பெரும்பாலும் மனச்சோர்வே துயரங்களைப் பெரிதாக்குகிறது.துயரம் வந்து விட்டது இனி மீளவே முடியாது என்று இடிந்து போய் உட்காராமல்
தீர்த்துக்கொள்வது என்ற நிலைக்கு பகிர்ந்து கொள்ளும் பழக்கம்தான் முதல் படி.எல்லொருக்கும் ஏதொ ஒரு வகையில் குழப்பம் அல்லது துன்பம் இருக்கும்.தனக்கு மட்டுதான் இப்படி வந்துள்ளது என்று நினைத்து எப்பொதும் சோகமாக அல்லது வழ்க்கையில் பிடிப்பில்லமல் நடப்பது தேவையில்லாதது.மிக எளிதாக தீர்த்துக்கொள்ள முடியும் என்று மற்றவர் நினைக்கும் பிரச்சினைகளைக்கூட நமக்கென்று வந்து விட்டால் செயலிழந்து போகிறோம். கடவுளை வேன்டிக்கொள் நல்ல தீர்வு கிடைக்கும் என்று பெரியவர்கள் கூருவர்கள். கடவுளிடம் கூறும்போதே நம்மிடமும் ஒரு முறை நாமாகவே சொல்கிறோம் அல்லவா? நம்ம் உள் மனதெ கூட இன்னொரு ஆளின் இடத்தில் இருந்து தீர்வுக்கு யோசனை வழங்கக்கூடும்.
ஆகவே மாற்றி மாற்றி எதாவது யுக்திகளைக் கையாள வேன்டும்.மனமிடிந்து போகக்கூடது,துன்பமாகவே ஒருவரின் வாழ்க்கை பூராவும் இருந்த்து விடாது. இன்பமனதாகவேயும் இருக்காது.துன்பத்துக்கப்புறம் இன்பம் நிச்சயம் வரும் என்ற நம்பிக்கையெ நிஜம்.
Sunday, September 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment