Monday, March 10, 2008
புதுமைப்பெண்கொடி
நாலு மாதம் முன்பு மதுரை போயிருந்தேன். தம்பி வீட்டில் இரண்டு நாள் தங்கி விட்டு வந்தேன். அவன் வீடு மதுரையில் ஒரு தனி வீடு, வீட்டைச்சுற்றி தோட்டம். தம்பியும் தம்பி மனைவியும் அழகிய தோட்டத்தை உருவாக்கியிருந்தார்கள்.எல்லாவிதமான மலர்களும் கொத்து கொத்தாகப் பூத்திருந்தன. பார்க்கவே ஆசையாக இருந்தது.அதில் சீக்க்கிரமே முளைக்கக்கூடிய சங்குச்செடியின் விதைகளைப் பறித்துப்பையில் போட்டுக்கொண்டு சென்னை வந்தேன்.சென்னைக்கு வந்ததும் சங்குச்செடி விதைகளை ஒரு தொட்டியில் மண் போட்டு நீர் ஊற்றி ஊன்றி வைத்தேன். ஒரு மாதகாலம் தண்ணிர் ஊற்றியபின் மெதுவாகச்செடி முளைத்து வர ஆரம்பித்தது.மெதுவாக இரண்டு இலகள் நான்கு இலைகள் என்று வளர ஆரம்பித்தது. ஏழெட்டு இலைகளும் விட்டு கொஞ்சம் கொடியும் வளர்ந்தபின் கொடி நுனி அறுந்து விடப்போகிறதே என்று ஒரு கொம்பைப்பக்கத்தி வைத்தேன். கொடியும் மேலே வளர்ந்ததே தவிர கொம்பைச்சுற்றிக் கொள்ளவே இல்லை. எனக்கோ ஒரே ஆச்சரியம்.நான் பார்த்தவரை கொடி நீளமாக வளரத்தொடங்கியவுடனேயே பக்கத்திலிருக்கும் எந்த ஒரு பற்றுதலையும் கொடிகள் சுற்றிக்கொள்வது இயல்பாக நடக்கும் ஒன்றுதானே?இந்தக்கொடி என்னவோ இரண்டு மூன்று நான்கு அடிகள் என்று வளர்கிறது ஆனால் கொம்பை சுற்றிக்கொள்ளவேஇல்லை. பக்கத்திலிருக்கும் கிரில் (grilல்)மீதும் படர வில்லை.இப்போது இன்னும் சில கிளைகள் அதே செடியிலிருந்து வளர்கின்றன. அவைகள் ஒன்றை ஒன்று சுற்றிக்கொள்கின்றன.கொம்பை நாடாத கொடியாக இந்த சங்குச் செடியைப் பார்த்தவுடன் அந்தச்செடிக்கு புதுமைப்பெண் என்று பெயரிடத் தோன்றியது எனக்கு. சரிதானே?
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
கல்யாணக்கமலா,
பேரே ரொம்பப் புதுமையாக இருக்கு.
இன்னிக்குத்தான் உங்க பதிவுகள் அனைத்தையும்(!) பார்த்தேன்.
எப்படி?
புதுசா இருக்கீங்க, நம்ம வீட்டுக்கு வந்துட்டுப்போனீங்களேன்னு உங்க வீட்டை எட்டிப்பார்த்தேன்.
ஆஹா..... சின்னிதான் டாப்பு.
ராமேஸ்வரம் சூப்பர்.
மைசூர்பாக் எனக்குப் பிடிக்குமுன்னு உங்களுக்கு யார் சொன்னா? :-)))
உங்க பதிவுகளைத் தமிழ்மணத்தில் சேர்க்கலையா?
கடைசியா ஒண்ணு சொல்லிக்கறேன்.
உங்க ஃபாண்ட் சைஸைக் கொஞ்சம் பெருசு பண்ணிக்கலாம். எழுதும்போது சின்னச் சின்னப் பத்தியா பிரிச்சு எழுதுங்க. படிக்கும் கண்களுக்கு அயர்வு ஏற்படாது.
வலை உலகில் வந்தமைக்கு வாழ்த்து(க்)கள்.
சொல்ல விட்டுப்போச்சு.
காமெண்ட்ஸ் மாடரேஷன் போட்டுக்குங்க.
வீண்தொல்லைகளைத் தவிர்க்க உதவும்:-)
வலைத்தளத்துக்கு வந்தமைக்கும்,நன்றி.ஆலோசனைகளுக்கு நன்றி துளசி!
அன்புடன்
கமலா
Post a Comment