இன்னைக்குக்காலையில் எழுந்து எதையாவது செய்யவேண்டும் என்று மட்டும் நினைக்கிறோம். திட்டமிடல் என்ற பெயரில்.திட்டமிடும் போது ஒரு மகனாக அல்லது மகளாக,தாயாக அல்லது தந்தையாக,கணவனாக அல்லது மனைவியாக,சகோதரனாக அல்லது சகோதரியாக மட்டுமே என்ன என்ன செய்யலாம் என திட்டமிடுகிறோம்.வேலை செய்யும் இடத்தில் செய்யவேண்டிய பணிகள் நிமித்தம் திட்டமிடவும் செய்கிறொம். என்றைக்காவது ஒரு சிறந்த மனிதனாக நாம் ஒரு நாளைத் திட்டமிட்டால் என்னவெல்லாம் செய்ய முடியும். யார் யாருக்கு என்ன என்ன செய்ய முடியும். எந்தெந்த வகையில் நாம் சிறந்தவன்? அதை நாம் எப்படி உபயொகித்து சில பல சிறந்தது என்று எல்லொராலும் கருதப்படுகிற செயலைச் செய்யமுடியும. முன்பு சொன்ன உறவு முறைகளை சந்தோஷப்படுத்த திட்டமிட்டு செயல்கள் செய்து வெற்றி பெற்றாலே போதுமே என்றுதான் பெரும்பாலும் எல்லொருக்கும் தோன்றும். அதையும் தாண்டி சாதிக்கப்பிறந்தவர்கள் சில பல செயல்களைச் செய்கிறார்கள்.அதனால்தான் அவர்களைச் சாதிக்கப் பிறந்தவர்களாக நினைக்கிறோம். அதற்கு மூலதனம் தன்னம்பிக்கை மற்றும் நேர்மையான உழைப்பு. தன்னம்பிக்கை எப்போது வரும்? தான் செய்யும் செயல் தீமை விளைவிக்காதது, நல்ல செயல்தான் என்பதை நாம் முதலில் நம்பவேண்டும்.அந்த செயலைச் செய்யும்போது ஏற்படும் அல்லல்கள் மற்றும் அவதுறுகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். நாம் அந்த செயலை அனுபவித்து(விரும்பி)ச்செய்ய வேண்டும்.அதைத்தான் involvement என்கிறார்கள்.
சில சமயங்களில் நாம் பார்ப்போம் சில தொழில்முனைவோர் (proffessionals)ஒரு வேலையில் அதிகமாக நாட்டம் காட்டுவார்கள் .அந்த வேலை அவர்களுக்கு மற்ற வேலைகளைவிட அதிக பணம் வர வாய்ப்பே இருக்காது. நேரம் அதிகமாகச் வழிக்கவேண்டியிருக்கும். வேலை பளுவும் அதிகமிருக்கும். ஆனாலும் அதைச் செய்ய நினைப்பார்கள் .செய்தும் வெற்றிகரமாக முடிப்பார்கள்.காரணம் அந்த ஈடுபாடும், நியாயமானது என்ற எண்ணமும் ,அந்த எண்ணம் தந்த நம்பிக்கையுமே ஆகும்.அந்த மாதிரி மனிதர்கள்தான் அடுத்தவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறார்கள்.மற்றவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவது என்பது சும்மா வருவதில்லை.மிகப் பெரிய பண்புகளில் தலையாய ஒன்று அது.உன்னை நம்புகிற கூட்டத்தையும் உன்னை நேசிக்கிற கூட்டத்தையும் சம்பாதிப்பது மிகவும் உயர்ந்தவை.அதைப்போல நமக்கும் பல சமயங்களில் நாம் ஏன் இதை எடுத்துச் செய்யக்கூடாது என்று தோன்றும்படி சில செயல்கள் நம் முன் நிற்கும். அந்ததருணங்களில் சிறிதுகூட அடுத்த சிந்தனைக்கு இடம் தராமல் நம்பிக்கை உள்ள ஒரு நல்ல செயலை ஈடுபாட்டுடன் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். நம் பிள்ளைகளுக்கு வளர்த்து விட வேண்டும்.அடுத்தவர் செய்யட்டுமே என்று ஒரு கணம் தவற விட்டால் ஒரு வாய்ப்பை நாம் வாழ்வில் தவற விடுகிறோம் எனப்பொருள்.
Wednesday, April 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//இன்னைக்குக்காலையில் எழுந்து எதையாவது செய்யவேண்டும் என்று மட்டும் நினைக்கிறோம்.//
சரியாச் சொன்னீங்க. கண்னைத் திறந்ததும் இன்னிக்கு என்ன கொழம்பு வைக்கணும் என்பது தலையாய பிரச்சனை.
//சில சமயங்களில் நாம் பார்ப்போம் சில தொழில்முனைவோர் (proffessionals)ஒரு வேலையில் அதிகமாக நாட்டம் காட்டுவார்கள் .அந்த வேலை அவர்களுக்கு மற்ற வேலைகளைவிட அதிக பணம் வர வாய்ப்பே இருக்காது. நேரம் அதிகமாகச் வழிக்கவேண்டியிருக்கும்.//
மாய்ஞ்சு மாய்ஞ்சு இப்படி பதிவு எழுதறதைத்தானே சொல்றீங்க?:-))))
நீங்க சொல்வது சரியாத்தானிருக்கும்......
அன்புடன்
கமலா
Post a Comment