படிப்பது ராமாயணம்.......
.ஒரு நாள் கடுமையான தலைவலி. தாங்க முடியவில்லை.தனியே அவதிப்பட்டுக்கொன்டிருக்கிறோம். சட்டென்று பக்கத்தில் ஒருவர் மத்திரை ஒன்றை எடுத்துக்கொடுத்து தண்ணீர் கொடுத்தால் தேவலையாகிவிடும். ஆனால் இந்த சிறிய செயலை செய்து கொள்ளத்தெரியாமல் அவதிப்படுவது பெரும்பலும் நடக்கும் விஷயம்தான்.இந்த குறிப்பிட்ட மேற்கோள் இது மிகச்சிறிய விஷயம்,ஆனால் பெரிய பெரிய விஷயஙளில் கூட இதே அளவு உதவி இருந்தால் பெரிய தீர்வுகள் கிடைக்கும்.சின்ன மற்றும் பெரிய ப்ரச்சினைகளுக்கு மற்றவர் ஒரு சிறிய கைத்தூக்கல் தூக்கி விட்டால்பிரச்சினை தீர்ந்து விடும்.அனுமனுக்கு ஒரு ஜாம்பவான் இருந்ததால்தான் சுந்தரகான்டம் ராமாயணத்தில் உருவாயிற்று.அனுமனைக் கடலைத்தான்ட வைக்க ஜாம்பவனின் ஒரு சிரு ஊக்கம்தான் காரனமாயிற்று.அனுமன் கடல் தாண்டாவிட்டால் ராமாயணம் ஏது? ஒவ்வொருவீட்டிலும் ஒவ்வொரு ஊரிலும் பல ஜாம்பவான்கள் இருந்தால் நன்றாயிருக்குமே!ஒவ்வொருவரும் ஜாம்பவனாக மாறுவதைத்தான் ராமாயணம் எதிர் பார்க்கிறது.ஏன் மாற முடியவில்லை?ஏன் செய்யவில்லை? ஏன் பழக்கப்படுத்திக்கொள்ள வில்லை?மனதால்,உடம்பால்,வார்த்தையால் உதவுவது என்பது பழக்கம்தான் காரணம்.பழக்கப்படுத்திகொள்வோம் பிரதி பலன் எதிர் பார்க்காமல் உதவுவதை.
Monday, September 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
"பழக்கப்படுத்திகொள்வோம் பிரதி பலன் எதிர் பார்க்காமல் உதவுவதை."
உங்கள் இந்த எதிர் பார்ப்பு நன்றாக தான் இருக்கிறது.
பெரும்பாலோர் அவ்வாறு செய்ய முன்வந்தால் நல்லா தான் இருக்கும்.
=குடந்தை வாசி
Post a Comment